TAMIL MURASU – சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23 அன்று நடைபெற்றது.
சிங்கப்பூரில் உலக வனவுயிர் நிதி (World Wildlife Fund) அமைப்பின் சார்பில், ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் கருப்பொருளில், ‘விஸ்மா ஏற்றியா’ கடைத்தொகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.